[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

“ஷமிக்குப் பதிலாக மீண்டும் புவனேஷ்வர் குமார்” - சச்சின் விருப்பம்

tendulkar-picks-bhuvi-over-hat-trick-man-shami-for-wi-clash

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷமிக்குப் பதிலாக மீண்டும் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்படவேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 

உலகக் கோப்பை தொடரில் நாளை இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதவுள்ளன. இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் காயம் அடைந்தார். இதனையடுத்து அவர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. அந்தப் போட்டியில் இவருக்குப் பதில் முகமது ஷமி சேர்க்கப்பட்டார். அந்தப் போட்டியில் ஷமி சிறப்பாக பந்துவீசி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். 

இந்நிலையில் நாளை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமார் விளையாட வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “புவனேஷ்வர் குமார் தற்போது காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். நான் அவர் பயிற்சின் போது பந்து வீசுவதை பார்த்தேன். அவர் மிகவும் நல்ல உடல்நிலையில் உள்ளார். எனவே அடுத்து விளையாடவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் முகமது ஷமிக்குப் பதிலாக மீண்டும் இவர் இடம் பெறவேண்டும். 

ஏனென்றால் புவனேஷ்வர் குமார் இடது கை ஆட்டக்காரர்களுக்கு நன்றாக பந்துவீசக்கூடியவர். அதிலும் குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கிறிஸ் கெயிலுக்கு புவனேஷ்வர் கடும் நெருக்கடி கொடுப்பார். நான் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியிலும் கிறிஸ் கெயிலுக்கு புவனேஷ்வர் அதிகமான நெருக்கடியை கொடுத்தார். ஆகவே இந்தப் போட்டியில் புவனேஷ்வர் குமார் கண்டிப்பாக விளையாடவேண்டும். முகமது ஷமியை அணியிலிருந்து நீக்குவது கஷ்டமாக தான் இருக்கும். எனினும் அதை தவிர வேறு வழியில்லை.” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close