[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற கூட்டத் தொடர் நீட்டிப்பு? - மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS தோனியிடம் தேர்வுக்குழு பேச வேண்டும்: ஓய்வு விவகாரம் பற்றி சேவாக்!
  • BREAKING-NEWS கடத்தப்பட்ட குழந்தை '10 மணி' நேரத்தில் மீட்பு - வீட்டு பணிப்பெண் காதலனுடன் கைது
  • BREAKING-NEWS டி.என்.பி.எல். தொடர் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS விடிய விடிய தர்ணா - கர்நாடக சட்டப்பேரவையில் படுத்துறங்கிய எடியூரப்பா

ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இங்கிலாந்து?: டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

england-won-toss-and-elects-to-bowl-against-australia

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

உலகக் கோப்பை தொடரில் லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலியா அணியில் நாதன் லையன் மற்றும் பெரெண்டாஃப் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை. 


ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி நடப்புத் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி, 5 போட்டிகளில் வெற்றியையும், ஒரு போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது. மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி விளையாடிய 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியையும், 2 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதுவரை 147 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் ஆஸ்திரேலிய அணி 81 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 61 போட்டிக‌ளிலும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்த நிலையில் 3 போட்டிகள் மழை உள்ளிட்ட காரணங்களால் கைவிடப்பட்டுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close