[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்
  • BREAKING-NEWS இந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு

இதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் !

on-this-day-india-won-the-first-world-cup-in-1983-at-lord-s

2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டிகள் இங்கிலாந்து வேல்ஸ் நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களில் வருவதற்கு சாம்பியன் அணிகள் போட்டா போட்டி கொண்டிருக்கின்றன. இந்தியா இதுவரை எந்தத் தோல்வியும் சந்திக்காமல் கெத்தாக புள்ளிகள் பட்டியலில் 3 ஆம் இடத்தில் இருக்கிறது. இதே நாளில் 36 ஆண்டுகளுக்கு முன்பு கபில் தேவ் தலைமயிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி 1983 ஆம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. அப்போது நாடே இந்த வெற்றியை பெரும் கொண்டாட்டமாவே பார்த்ததது.
         
1975 மற்றும் 1979 ஆம் ஆண்டு என முதல் இரண்டு உலகக் கோப்பை போட்டிகளில் அபாரமாக ஆடி சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, சிறிய அணியான இந்தியாவிடம் தனது சாம்பியன் பட்டத்தை பறிகொடுத்தது. 1983 ஆம் ஆண்டு புருடென்ஷியல் உலகக் கோப்பை போட்டி ஜூன் 9 முதல் 25-ஆம் தேதி வரை இங்கிலாந்தில். அந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து, மே.இ.தீவுகள், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. இதில் இரட்டை ரவுண்ட் ராபின் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டி நடைபெற்றது. மொத்தம் 27 ஆட்டங்கள் நடைபெற்றன.

1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பை முற்றிலும் எதிர்பாராத விதமான முடிவுகளை அளித்தது. இதிலும் 60 ஓவர் அடிப்படையிலேயே போட்டி நடத்தப்பட்டது. 15 மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெற்றன. இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. ஏ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூஸிலாந்து, இலங்கையும், பி பிரிவில் மே.இ.தீவுகள், ஆஸ்திரேலியா, இந்தியா, ஜிம்பாப்வே அணிகளும் இடம் பெற்றன. இந்தியா தனது லீக் ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸை 34 ரன்கள் வித்தியாசத்திலும், ஜிம்பாப்வேயை 5 விக்கெட் வித்தியாசத்திலும், மற்றொரு ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 31 ரன்கள் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியாவை 118 ரன்கள் வித்தியாசத்திலும், வென்றது.

Image result for 1983 world cup final

இதனையடுத்து அரையிறுதி சுற்றுகள் நடைபெற்றன ஏ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தானும், பி பிரிவில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதியில் இங்கிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்தியா இறுதிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது வெஸ்ட் இண்டீஸ்.
இறுதிச் சுற்றில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை பேட்டிங் செய்ய சொன்னது. அப்போது உலகிலேயே சிறந்த வேகப்பந்து வீச்சைக் கொண்டிருந்தது வெஸ்ட் இண்டீஸ். இந்திய அணியில் ஸ்ரீகாந்த் 38, அமர்நாத் 26 ரன்களை சேர்த்தனர். 

Related image

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆன்டி ராபர்ட்ஸ், ஜோயல் கார்னர், மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங் இந்தியாவை நிலைகுலையச் செய்தனர்.  54.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா. எளிதாக வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிப்பெற்றுவிடும் என அனைவரும் நினைத்திருந்த நேரத்தில் இந்திய பவுலர்கள் மிக திறமையாக பந்து வீசினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, இந்தியா சாம்பியன் ஆனது. முதல் முதலாக உலக் கோப்பையை கையில் ஏந்தி முத்தமிட்டார் கபில் தேவ்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close