[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா

பங்களாதேஷூடன் இன்று மோதல்: முதல் வெற்றி பெறுமா ஆப்கான்?

bangladesh-look-to-overcome-promising-afghanistan-in-crunch-game

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 31 வது லீக் போட்டி இன்று நடக்கிறது. சவுத்தாம்டனில் நடக்கும் இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் -பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. பங்களாதேஷ் அணி, இதுவரை 6 போட்டிகளில் விளையாடி, 2-ல் வெற்றியும் 3 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது. ஒன்றில் முடிவில்லை. 5 புள்ளியுடன் இருக்கும் அந்த அணி, அடுத்து மோதும் அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றால் தான் அரையிறுதிக்குச் செல்ல முடியும். அதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற போராடும். ஆப்கான் அணி, இந்தியா வுக்கு எதிரான போட்டியில், சுழலில் மிரட்டி இருப்பதால் பங்களாதேஷ் அணிக்கும் கடும் நெருக்கடி கொடுப்பார்கள்.

மோர்டாசா தலைமையிலான பங்களாதேஷ் அணியில் தமிம் இக்பால், ஷகிப், லிடன் தாஸ், முஷ்பிகுர் ரஹிம், மஹ்மத்துல் லா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். பந்துவீச்சில், முஸ்தபிஷூர் ரகுமான், சைபூதின் ஆகியோ ர் நன்றாக வீசி விக்கெட் வீழ்த்துகிறார்கள்.

இந்த உலக கோப்பையில், ஒரு வெற்றி கூட பெறாமல் கடைசியில் இருக்கிறது ஆப்கான் அணி. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று புள்ளி கணக்கை தொடங்க அந்த அணி, கடுமையாக போராடும். இதுவரை ஆடியுள்ள 6 ஆட்டங்களிலும்
தோல்வியடைந்துள்ள ஆப்கானின் அரையிறுதி கனவு எப்போதோ முடிந்துவிட்டது.

குறைந்தபட்சம் ஒரு வெற்றியோடு வெளியேற நினைக்கும் அந்த அணி, இன்றைய போட்டியில் தீவிரம் காட்டும். அந்த அணியில் முகமது நபி, ரிஷித் கான்,முஜிபூர் ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சுழலில் மிரட்டினார்கள். இன்றைய போட்டி நடக்கும் மைதானமும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அவர்கள் மிரட்டுவார்கள்.

இரண்டு அணிகளும் இதுவரை 7 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 4 ல் பங்களாதேஷூம் 3 போட்டியில் ஆப்கானிஸ் தானும் வெற்றி பெற்றுள்ளன. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close