[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்: வெற்றிக் கட்டாயத்தில் பாகிஸ்தான்!

pakistan-south-africa-meet-in-must-win-match

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி, 5 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றியையும், ‌3 போட்டிகளில் தோல்வியையும் ‌சந்தித்துள்ளது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 89 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் கடும் விமர்சனத்துக்குள்ளான அந்த அணி, அரை இறுதி வாய்ப்பில் நீடிக்கவேண்டும் என்றால் இன்றைய போட்டியில் கண்டிப்பாக வெற்றிப்பெற வேண்டும். 

அந்த அணியில், இமாம் உல்-ஹக், பஹார் ஜமான், பாபர் ஆஸாம், அனுபவ வீரர் முகமது ஹபீஸ் ஆகியோர் நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடி வருகின்றனர். மூத்த வீரர் சோயிப் மாலிக் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவருக்கு பதிலாக வேறு வீரர் இன்று சேர்க்கப்படலாம். பந்துவீச்சில் முகமது ஆமிர் மட்டுமே மிரட்டுகிறார். மற்றவர்கள் தடுமாறுகிறார்கள்.

தென்னாப்பிரிக்க அணி, நடப்புத் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. நான்கு போட்டியில் தோல்வி அடைந்தது. ஒரு போட்டி மழையால் ரத்தானது. அந்த அணியில் பந்துவீச்சில் சிறப்பாக இருக்கிறது. பேட்டிங்கில் நிலைத்தன்மை இல்லை. எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடுவதில்லை. அந்த அணி, கிட்டத்தட்ட அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. அதனால் இன்றைய போட்டி அந்த அணிக்கு சம்பிரதாய ஆட்டம்தான்.

தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 78 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் தென்னாப்பிரிக்க அணி 50 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 27 போட்டிக‌ளிலும் வெற்றி பெற்றுள்ளன. 7 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close