[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

ஒரு கட்டத்தில் சந்தேகம் வந்துவிட்டது: விராத் கோலி

we-had-doubts-at-the-halfway-stage-kohli

’ஆப்கானுக்கு எதிரான ஆட்டத்தின் போது, என்ன நடக்குமோ என்று எங்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது’ என்று இந்திய கேப்டன் விராத் கோலி கூறினார்.

உலகக் கோப்பை தொடரில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி சவுதாம்ப்டன் நகரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராத் கோலி அதிகபட்சமாக 67 ரன்கள் அடித்தார். கேதர் ஜாதவ் 52 ரன் எடுத்தார். ஆப்கான் வீரர்கள் அபாரமாக பந்துவீசினர். 

225 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கான் அணி, கடைசி வரை இந்திய அணிக்கு தண்ணி காட்டியது. கடைசி ஓவரில் முகமது ஷமி, ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதால், அந்த அணி தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் வெற்றிக்குப்பின் பேசிய இந்திய கேப்டன் விராத் கோலி, ஒரு கட்டத்தில் சந்தேகம் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, ’’அதிக ரன் குவிக்க வேண்டும் என்று டாஸ் வென்றதும் பேட்டிங்கை தேர்வு செய்தேன். ஆனால், பிறகுதான் பிட்ச் மெதுவாக இருந்தது தெரியவந்தது. அதோடு ஆப்கான் அணியில் சிறந்த ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்களை கட்டுப்படுத்தி விட்டார்கள். 250- 260 ரன்கள் என்பது இந்த பிட்சில் நல்ல ஸ்கோர் என்று நினைத்தேன். அதை எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், நாங்கள் நினைத்த திட்டத்தை செயல் படுத்தமுடியவில்லை. இந்த பிட்சில் நேரடியான ஷாட்களை தேர்ந்தெடுத்து ஆடியிருக்க வேண்டும். 

எங்கள் வீரர்கள் நல்ல ஷாட்களை தேர்ந்தெடுத்து ஆடுவது அவசியம். பிட்சின் தன்மையை கருத்தில் கொண்டு ஒன்று, இரண்டு ரன்களாக அடிக்க வேண்டும். அப்போதுதான் அதிக ரன்களை குவிக்க முடியும். ஆப்கான் அணியில் நபி சிறப்பாக பந்துவீசினார். மிடில் ஓவரில் எங்களுக்கு சரியான நெருக்கடி கொடுத்தார். ஒரு கட்டத்தில், என்ன நடக்குமோ என்று எங்களுக் கு சந்தேகம் வந்துவிட்டது.  பும்ரா எந்த நேரத்திலும் விக்கெட்டை வீழ்த்தி எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கக் கூடியவர். இந்தப் போட்டியிலும் அவர் சிறப்பாக பந்துவீசினார். கடைசி ஓவரில் ஷமி, அசத்தலாக பந்துவீசி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். அவர் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார். விஜய் சங்கரும் தனது திறமையை காண்பித்தார். இந்த வெற்றி நம்பிக்கையை கொடுத்திருக்கிறது’’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close