[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

இந்தியா- ஆஃப்கான் இன்று மோதல்: தினேஷ்- ரிஷப், யாருக்கு வாய்ப்பு?

icc-world-cup-2019-india-ready-against-distressed-afghanistan

உலகக் கோப்பை தொடரில், இந்தியா- ஆஃப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. சவுத்தாம்டனின் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் போட்டியில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், நியூசிலாந்து அணியுடனான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியை ‌சந்தித்துள்ளது. 

பேட்டிங், பந்துவீச்சு என வலுவாக இருக்கும் இந்திய அணி, தனது வெற்றியை தொடரும் முனைப்பில் இன்று விளையாடும். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் சில ஆட்டங்களில் ஆட மாட்டார் என்பதால் அவருக்குப் பதிலாக முகமது ‌ஷமி இடம் பெறுகிறார். பயிற்சியின் போது பந்து தாக்கியதில் காயம் அடைந்துள்ள விஜய் சங்கர் உடல்நலம் தேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவர் ஆடாவிட்டால், தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பன்ட் ஆகியோரில் ஒருவர் சேர்க்கப்பட வாய்ப்பிருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணி, அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணி, இங்கிலாந்துக்கு எதிராக மோசமாக தோற்றது. நட்சத்திர சுழல்பந்துவீச்சாளர் ரஷித்கான் 110 ரன்களை வாரி வழங்கி மோசமான சாதனை படைத்தார். இந்திய பேட்ஸ்மேன்கள், சுழல் பந்துவீச்சாளர்களை எளிதாக எதிர்கொள்வார்கள் என்பதால், ரஷித், நபி பந்துகளை விளாசுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவின் 50 வது வெற்றியாக அது அமையும். இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 2 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் ஒரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close