[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுவை சேர்ந்த ஒருவரே முதல்வராக இருப்பார் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்கிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS 2021ம் ஆண்டு அரசியலில் தமிழ் மக்கள் மிகப் பெரிய அதிசயத்தை, அற்புதத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் நிகழ்த்துவார்கள் - ரஜினிகாந்த்

மலிங்கா வேகத்தில் வீழ்ந்தது இங்கிலாந்து - இலங்கை அசத்தல் வெற்றி

england-vs-sri-lanka-highlights-world-cup-2019-sri-lanka-beat-england-by-20-runs

இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் மேத்யூஸ் 85 ரன்கள் எடுத்து அசத்தினார். பெர்னாண்டோ 49, மெண்டீஸ் 46 ரன்கள் எடுத்தனர். ஆர்ச்சர், உட் தலா 3 விக்கெட் சாய்த்தனர். 

        

இதனையடுத்து, 233 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பேரிஸ்டோவ் மலிங்கா பந்துவீச்சில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். வின்ஸையும் 14 ரன்னில் வெளியேற்றினார் மலிங்கா. சற்று நேரம் தாக்குப்பிடித்த மோர்கன் 21 ரன்னில் உடானா பந்துவீச்சில் கேட்ச் ஆனார். 

அரைசதம் அடித்து விளையாடிய ரூட்டை 57 ரன்னில் சாய்த்தார் மலிங்கா. அத்துடன், பட்லரையும் 10 ரன்னில் ஆட்டமிழக்க செய்தார். இங்கிலாந்து அணி 35 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. அந்த அணி 15 ஓவர்களுக்கு 82 ரன் எடுக்க வேண்டியிருந்தது. ஸ்டோக்ஸ் ஒரு புறம் அதிரடியாக விளையாட மறுபுறம் விக்கெட் சரிவு தொடர்ந்தது. 

            

மொயின் அலி 16, வோக்ஸ் 2, ரஷித் அலி 1, ஆர்ச்சர் 3 என அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். 186 ரன்களுக்கு இங்கிலாந்து 9 விக்கெடை இழந்தது. அப்போது, 44 பந்துகளில் 47 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அதனால், இலங்கை எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்டோக்ஸ் தன்னுடைய அதிரடியை தொடர்ந்தார். இருப்பினும், 47வது ஓவரின் கடைசி பந்தில் உட் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மலிங்கா 4 விக்கெட் எடுத்தார். டி சில்வா 3 விக்கெட் எடுத்தார். உடானா இரண்டு விக்கெட் சாய்த்தார். மலிங்கா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

      

6 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணிக்கு இது இரண்டாவது வெற்றி ஆகு. அதேபோல், 6 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணிக்கு இது இரண்டாவது தோல்வி ஆகும். ஏற்கனவே பங்களாதேஷ் அணியிடம் இங்கிலாந்து தோற்றது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close