[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் : நாளை இரண்டு போட்டிகள் 

india-vs-afghanistan-icc-cricket-world-cup-2019-tomorrow-22-june-match

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

சவுத்ஹாம்ப்டன் நகரில் இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் போட்டியில் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், மற்றொரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 

ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியையே ‌சந்தித்துள்ளது. இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 2 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் ஒரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது. 

மான்செஸ்ட்டர் நகரில் நாளை மாலை 6 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு தொடரில் நியூசிலாந்து அணி விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் விளையாடிய 4 போட்டிகளில் 3 போட்டிகளில் தோல்வியையும், ஒரு போட்டியில் வெற்றியையும் பெற்றுள்ளது. 

இரு அணிகளுக்கும் தலா ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது. ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இவ்விரு அணிகளும் 64 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இவற்றில் மேற்கிந்திய தீவுகள் அணி 30 போட்டிகளிலும், 27 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளன. 7 போட்டிகளில் முடிவு ஏதும் காணப்படவில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close