[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற கூட்டத் தொடர் நீட்டிப்பு? - மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS தோனியிடம் தேர்வுக்குழு பேச வேண்டும்: ஓய்வு விவகாரம் பற்றி சேவாக்!
  • BREAKING-NEWS கடத்தப்பட்ட குழந்தை '10 மணி' நேரத்தில் மீட்பு - வீட்டு பணிப்பெண் காதலனுடன் கைது
  • BREAKING-NEWS டி.என்.பி.எல். தொடர் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS விடிய விடிய தர்ணா - கர்நாடக சட்டப்பேரவையில் படுத்துறங்கிய எடியூரப்பா

 “உங்களுக்காக வருத்தப்படுகிறேன் ஷிகர்” - சச்சின் ட்வீட்

feel-for-you-shikhar-says-sachin

முக்கியமான தொடரின் போது தாவனுக்கு ஏற்பட்ட காயம் தன் இதயத்தையே நொறுக்கிவிட்டது என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் அபாரமாக சதமடித்தார். அந்தப் போட்டியின்போது, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கம்மின்ஸ் வீசிய பந்து, தவானின் இடது கை பெருவிரலை பலமாகத் தாக்கியது. பின்னர், காயம் காரணமாக அடுத்த சில போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என அறிவிப்பு வெளியானது. ஆனால் பின்னர்,  ஷிகர் தவான் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

இது இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய அணி வீரர்களுக்கும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து வீடியோ வெளியிட்ட ஷிகர்,  ''நம்முடைய நாட்டிற்காக உலகக் கோப்பை தொடரில் விளையாட விரும்பினேன். நான் இப்போது சிகிச்சைக்காக  திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது'' என உருக்கமாக தெரிவித்தார்.

ஷிகர் தவான் விலகியதால் அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் சேர்க்கப்படுவார் என்றும் பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் தவானின் விலகல் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுகல்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், '' உங்களுக்காக வருத்தப்படுகிறேன் ஷிகர். நீங்கள் நன்றாக விளையாடினீர்கள். முக்கியமான தொடரில் உங்களுக்கு காயம் ஏற்பட்டது இதயத்தையே நொறுக்கிவிட்டது. நீங்கள் நிச்சயம் மீண்டு வருவீர்கள். 

நீங்கள் நன்றாக விளையாடி வருகிறீர்கள் ரிஷப் பண்ட். உங்கள் திறமையை நிரூபிக்க மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close