[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
  • BREAKING-NEWS தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்
  • BREAKING-NEWS வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

“நாட்டிற்காக விளையாட ஆசையாக இருந்தது” - வீடியோவில் தாவன் உருக்கம்

shikhar-dhawan-posts-emotional-message-after-being-ruled-out-of-world-cup

உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் அபாரமாக சதமடித்தார். அந்தப் போட்டியின்போது, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கம்மின்ஸ் வீசிய பந்து, தவானின் இடது கை பெருவிரலை பலமாகத் தாக்கியது. வலியுடன் விளையாடிய தவான், 109 பந்தில் 117 ரன் குவித்தார். அந்த விரல் கடுமையாக வீங்கியதை அடுத்து, அவர் பீல்டிங் கூட செய்ய வரவில்லை. பின்னர், காயம் காரணமாக அடுத்த சில போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என அறிவிப்பு வெளியானது. 

      

ஷிகர் தவான் விலகல் என அறிவிப்பு வெளியான உடனேயே ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், பாதி போட்டிக்கு மேல் அவர் வருவார் என்ற நம்பிக்கை இருந்தது. கேப்டன் விராட் கோலியும் அந்த நம்பிக்கையை கொடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கூட அவர் மைதானத்தில் இருந்தார். நிச்சயம் அடுத்த சில போட்டிகளுக்கு பின் தவான் களமிறங்குவார் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்.

       

ஆனால், பிசிசிஐ இன்று தவானின் அதிகாரப்பூர்வமான நீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது இந்திய ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தவானின் நீக்கம் இந்திய அணிக்கு பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா - ஷிகர் தவான் ஜோடி கடந்த சில ஆண்டுகளாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இருவரும் களத்தில் நின்றுவிட்டால் எதிரணி அவ்வளவுதான். குறிப்பாக தவான் பந்துகளை வீணடிக்காமல் சீரான வேகத்தில் ரன்களை சேர்ப்பார்.

உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் தவானின் ஆட்டம் அபாரமாக இருக்கும். 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் கோல்டன் பேட் இவருக்கு கிடைத்தது. அதேபோல், 2017 சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலும் இவர் கோல்டன் பேட் கிடைத்தது. அதேபோல், 2015 உலகக் கோப்பையில் இந்திய அணி சார்பில் இவர் அதிக ரன்கள் குவித்து இருந்தார். 

       

தவான் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது குறித்து பல்வேறு தரப்பிலும் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்திய வீரர் ரவிசந்திர அஸ்வின், “தவான் காயம் காரணமாக உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது மிகவும் சோகமான விஷயம். அவர் விரைவில் குணமடைய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். 

         

இதனிடையே, ஷிகர் தவான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு உருக்கமான வீடியோ பதிவை பதிவிட்டுள்ளார். அதில், “என் மீது அன்பு வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த வீடியோ பதிவு. எதிர்பாராத விதமாக என்னுடைய கட்டைவிரலில் காயம் ஏற்பட்டுவிட்டது. நம்முடைய நாட்டிற்காக உலகக் கோப்பை தொடரில் விளையாட விரும்பினேன். நான் இப்போது சிகிச்சைக்காக  திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. அடுத்தடுத்த போட்டிகளுக்கு நான் தயாராக வேண்டும். நம்முடைய வீரர்கள் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றுவார்கள் என நம்புகிறேன். தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். உங்களது அன்பிற்கு நன்றி” என அவர் பேசியுள்ளார்.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close