[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

தோனி ஓய்வு பெற வேண்டுமா? - கிலென் மெக்ரத் கருத்து

icc-world-cup-2019-glenn-mcgrath-makes-bold-statement-on-ms-dhoni-s-future-in-team-india

இந்திய அணி வீரர்களின் செயல்பாடுகளை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மெக்ரத் பாராட்டியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிலென் மெக்ரத் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தன்னுடைய பயணத்தின் போது அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்திய வீரர்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். 

              

தோனியின் ஓய்வு குறித்து பேசுகையில், “தோனி ஓய்வு பெறுவது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால், தோனி விளையாட நினைக்கும் வரை அவர் விளையாட வேண்டும். ஒருநாள் போட்டிகளில் அவரது அனுபவம் இந்திய அணிக்கு மிகவும் பயன்படும்” என்று தெரிவித்துள்ளார். 

                

அதேபோல், இந்திய அணியின் பந்துவீச்சு குறித்தும் பாராட்டு தெரிவித்துள்ளார். “ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது அவர்களுடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக ஜஸ்பிரிட் பும்ராவின் பந்துவீச்சு அபாரமாக உள்ளது” என்று கூறினார் மெக்ரத்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close