[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

ஸ்டம்புகளை தெறிக்கவிட்ட அர்ஜூன் டெண்டுல்கர் ! லார்ட்ஸ் மைதானம் பெருமிதம்

arjun-tendulkar-dismisses-surrey-2nd-xi-batsman-with-raw-pace

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர். இவர் கடந்தாண்டு 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் திடீரென அர்ஜூன் டெண்டுல்கர் எடுத்த விக்கெட் ஒன்று வைரலாகி வருகிறது. ஆம், அர்ஜூன் டெண்டுல்கர் இப்போது இங்கிலாந்தின் சர்ரே கவுண்ட்டி அணிக்கு எதிராக விளையாடி வருகிறார்.

எம்சிசி இளம் வீரர்களுக்கும் - சர்ரே அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் அர்ஜூன் டெண்டுல்கரின் வேகப் பந்து வீச்சில் சர்ரே அணி பேஸ்ட்மேன் க்ளீன் போல்ட் ஆவார். இந்த வீடியோவை லார்ட்ஸ் கிரிக்கெட் மைதான நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. சர்ரே அணியின் வீரர் டெய்லி 4 ரன்கள் எடுத்து விளையாடியபோது, அர்ஜூன் டெண்டுல்கரின் வேகப்பந்து வீச்சில் போல்டாகி வெளியேறினார். இந்த வீடியோவை லார்ட்ஸ் கிரிக்கெட் மைதான நிர்வாகம், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து பாராட்டியுள்ளது.

இந்தப் போட்டியில் 50 ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அர்ஜூன் டெண்டுல்கர். 11 ஓவர்கள் வீசிய அவர், 2 மெய்டன் ஓவர்களையும் வீசினார்.  எனினும் இந்த 11 ஓவர்களில் 4 நோபால்களை வீசினார் அர்ஜுன் டெண்டுல்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close