[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

“ரூட், ஷகிப், ஸ்மித்” - உலகக் கோப்பையில் ஜொலிக்கும் கிளாசிக் வீரர்கள் 

odi-classic-players-joe-root-smith-virat-kohli-continue-their-play-in-cwc19

உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரை பொறுத்தவரை பேட்டிங்கில் ஷகிப் அல் ஹாசன், ரூட், ஆரோன் பின்ச், ரோகித் சர்மா உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் இவர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதிக ரன்கள் அடித்தவர்கள்:

ஷகிப் அல் ஹாசன் - 384 (4 இன்னிங்ஸ்)
ஜோ ரூட்           - 367 (5 இன்னிங்ஸ்)
ஆரோன் பின்ச்      - 343 (5 இன்னிங்ஸ்)
ரோகித் சர்மா       - 319 (3 இன்னிங்ஸ்)
டேவிட் வார்னர்    - 281 (5 இன்னிங்ஸ்)  

ஒருநாள் போட்டி வித்தியாசமானது:

ஒரு நாள் போட்டிகளுக்கு என்று ஒரு தன்மை இருக்கிறது. அது டி20 போட்டிக்கும், டெஸ்ட் போட்டிக்கும் இடைப்பட்டது. டி20 போட்டிகளில் அதிரடிதான் பல நேரங்களில் கை கொடுக்கும். சிக்ஸர், பவுண்டரிகளாக அடிக்க வேண்டும். சில போட்டிகளில் மட்டும்தான் நிதானம் கைகொடுக்கும். அதேபோல், டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை மிகவும் நிதானமாக விளையாடி விக்கெட்டை பறிகொடுக்க கூடாது. பொறுமையாக ரன்களை சேர்க்கலாம்.

        

ஆனால், ஒருநாள் போட்டி என்பது 50 ஓவர் கொண்டது. இதில், சில வீரர்களுக்கு மட்டுமே அதிரடி செட் ஆகும். சேவாக், டிவில்லியஸ் போன்ற சிலர் மட்டுமே அதிரடி குறையாமல் ஒருநாள் போட்டிகளில் நீண்ட நாட்கள் தாக்குப்பிடித்தனர். இந்த வீரர்கள் களத்தில் சில ஓவர்கள் நின்றுவிட்டாலே ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடுவார்கள். ஆனால், பெரும்பாலும் கிளாசிக் ஆட்டம் என்பது சச்சின் டெண்டுல்கர் போன்ற சில வீரர்களுக்கு மட்டுமே வாய்த்துள்ளது.

கிளாசிக் வீரர்களாக ஜொலிக்கும் வீரர்கள்:

அந்த வகையில் தற்போது சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் கிளாசிக் வீரர்களாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், இந்திய அணியின் விராட் கோலி, நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்ஸன், தென்னாப்ரிக்கா அணியின் ஆம்லா. இதில், ரூட், ஸ்மித் இந்த உலகக் கோப்பை தொடரில் ஜொலிக்கின்றனர். 

      

ஷகிப் அல் ஹாசன், ரூட் இந்த உலகக்கோப்பை தொடரில் ஆடும் விதம் அவ்வளவு அற்புதமாக உள்ளது. இவர்கள் தேர்வு செய்யும் ஷார் அனைத்தும் நேர்த்தியாக உள்ளது. எதிரணி வீரர்களுக்கு எளிதில் விக்கெட் வாய்ப்பை இவர்கள் கொடுப்பதில்லை. சீரான வேகத்தில் ரன்களை சேர்க்கிறார்கள். இவர்கள் களத்தில் இருக்கும் வரை எதிரணிக்கு சிக்கல்தான். 

        

ஷிகிப் 4 இன்னிங் மட்டுமே விளையாடி தலா இரண்டு சதம், அரைசதம் அடித்துள்ளார். ஒவ்வொரு போட்டியிலும் தன்னுடைய முத்திரையை பதித்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று இவர் அடித்த சத்தால் அந்த அணி 322 ரன் என்ற இலக்கை எட்டியது. ஆனால், இவர் இதுவரை 4 சிக்ஸர் மட்டுமே அடித்துள்ளார். பெரும்பாலும் இவர் தேர்வு செய்யும் ஷாட் பவுண்டரிதான். மொத்தம் 43 பவுண்டரிகள் விளாசியுள்ளார்.

       

அதேபோல்தான், ஜோ ரூட். இவரும் இரண்டு சதம், இரண்டு அரைசதம் அடித்துள்ளார். இவரும் 2 சிக்ஸர் மட்டுமே அடித்துள்ளார். 32 பவுண்டரிகள் விளாசியுள்ளார். மிகவும் நேர்த்தியாக இவர் விளையாடுகிறார்.

     

அதேபோல், இந்திய அணியில் ரோகித் சர்மா தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகிறார். இரண்டு சதம், ஒரு அரைசதம் விளாசியுள்ளார். ஸ்மித் 3 அரைசதம் அடித்துள்ளார்.    

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close