[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

‘டைமன் பாண்ட்யா’வாக மாறிய ஹர்திக் - செயின் ரகசியம்

hardik-pandya-reveals-his-love-for-diamonds-on-chahal-tv

இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா உலகக் கோப்பை போட்டிக்காக ஸ்பெஷல் செயின் ஒன்றை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.

இந்திய அணியில் முக்கிய வீரர்களில் ஒருவராக ஹர்திக் பாண்ட்யா மாறிவிட்டார். இவரது பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலுமே அனல் பறக்கிறது. இதனால் இறுதி நேரத்தில் ஹர்திக் பாண்ட்யா களமிறங்கினால், அவரது அதிரடியை கொண்டாட பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகி விட்டது. பேட்டிங்கை விட இவரது பந்துவீச்சும் சிறப்பாகவே உள்ளது. அண்மையில் பாகிஸ்தானிற்கு எதிராக நடந்த போட்டியில் கூட, பேட்டிங்கில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களான சொயப் மாலிக் மற்றும் ஹஃபீஸ் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

தனக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டுமே பிடிக்கும் எனப் பலமுறை ஹர்திக் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த இரண்டிற்கு இணையாக வைரங்களையும் அவருக்குப் பிடிக்கும் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்திய சுழற்பந்து வீச்சாளரான சாஹல், தனது பெயரைக்கொண்டு ‘சஹால் டிவி’ என இந்திய வீரர்களையே பேட்டி எடுத்து வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் சாஹலுக்கு பேட்டியளித்த பாண்ட்யா, தான் உலகக் கோப்பைக்காக ஸ்பெஷலாக வாங்கிய வைர சங்கிலையை காண்பித்தார். அதில் சிறிய அளவில் பேட் மற்றும் பந்து என இரண்டுமே செதுக்கப்பட்டிருந்தது. அத்துடன் தனது கைகடிகாரத்திலும் வைரங்களை ஹர்திக் பதித்துள்ளார். மேலும் கை விரல் மோதிரத்திலும் வைரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த வைரங்களில் ஒன்று கண் திருஷ்டியையும் போக்கும் என்றும் அவர் கூறி இருக்கிறார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close