[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

பாக். பயிற்சியாளராக மாறினால் அறிவுரை வழங்குவேன்: ரோகித் சர்மா

india-vs-pakistan-rohit-sharma-s-cheeky-reply-to-pakistani-journalist-will-make-you-smile

பாகிஸ்தான் பேஸ்ட்மேன்களுக்கு என்ன அறிவுரை வழங்‌க விரும்புகிறீர்கள் என இந்திய வீரர் ரோகித்‌ சர்மாவிடம் கேட்‌கப்பட்ட கேள்விக்கு அவர், நகைச்சுவையுடன் பதிலளித்துள்ளார். 

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில்‌ ‌சதமடித்து இந்திய அணி நடப்பு உலகக்கோப்பையில் மூன்றாவது வெற்றியை‌ பெற உறுதுணையாக இருந்தார் ரோகித் சர்மா. 

உலகக் கோப்பை தொடரில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 140, விராட் கோலி 77, கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து, 337 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வியை தழுவியது. ஆட்ட நாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. 

போட்டிக்கு பிறகு செய்தியாளர்‌களை சந்தித்த ரோகித் சர்மாவிடம் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு என்ன அறிவுரை கூற விரும்புகிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பாகிஸ்தான் பயிற்சியாளரா‌க மாறினால் கண்டிப்பாக ‌அறிவுரை வழங்குவேன் என நகைச்சுவையுடன் பதிலளித்தார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close