[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோலி!

virat-kohli-reaches-milestone-in-record-time

உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த போட்டியில், வேகமாக 11 ஆயிரம் ரன்னை கடந்து சாதனை படைத்துள்ளார், இந்திய கேப்டன் விராத் கோலி.

உலகக் கோப்பை தொடரில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 140, விராட் கோலி 77, கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்தனர். 

இதனையடுத்து, 337 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வியை தழுவியது.

இந்தப் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, 57 ரன் எடுத்திருந்தபோது, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் 9-வது வீரராக இணைந்தார். அதே நேரம் இந்த மைல்கல்லை வேகமாக எட்டிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். கோலி தனது 222-வது இன்னிங்சில் 11 ஆயிரம் ரன்களை கடந்திருக்கிறார். இதற்கு முன்பு சச்சின் தெண்டுல்கர், தனது 276-வது இன்னிங்சில் இந்த இலக்கை அடைந்திருந்தார். இதுதான் சாதனையாக இருந்தது. அவரது சாதனையை விராத் கோலி முறியடித்துள்ளார். 

ஒருநாள் போட்டிகளில் இதற்கு முன் 11 ஆயிரம் ரன்னை கடந்தவர்கள்: விராட் கோலி - 222, சச்சின் - 276, ரிக்கி பாண்டிங் - 286, கங்குலி - 288, காலிஸ் - 293

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close