[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா

பாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா சதம் விளாசல்

india-vs-pakistan-rohit-sharma-hits-his-2nd-century-of-world-cup-2019-24th-of-odi-career

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார்

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா - ஷிகார் தவான் ஜோடி சிறப்பான தொடக்கம் அமைத்தது. இருவரும் அரைசதம் அடித்தனர். கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்தது. 

     

பின்னர், ரோகித் சர்மா உடன் கேப்டன் விராட் கோலி இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 85 பந்துகளில் சதம் விளாசினார். இதில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கும். 

இந்த உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மாவின் இரண்டாவது சதம் இது. தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் அவர் சதம் அடித்து இருந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பை தொடர்களில் சதம் விளாசிய இரண்டாவது வீரர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த உலகக் கோப்பை தொடரில் முதல் வீரராக விராட் கோலி சதம் அடித்து இருந்தார். ஒருநாள் போட்டிகளில் அவரது 24வது சதம்.

        

இந்தப் போட்டியில் ரோகித் சர்மா இரண்டு ரன் அவுட்களில் இருந்து தப்பினார். அதனை அவர் சரியாக பயன்படுத்தி சதம் அடித்துள்ளார். இந்திய அணி 36 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் 126, விராட் கோலி 26 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close