[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

தவான் இடத்தை நிரப்புவாரா ராகுல் ? : விஜய்சங்கருக்கு கிடைத்த வாய்ப்பு

kl-rahul-can-replace-dhawan-place

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை போட்டியில் தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை தொடரின் 22வது லீக் போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெறுகிறது. மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் இந்திய அணி முதல் பேட்டிங்கை தொடங்கியுள்ளது. இந்திய அணியில் ஷிகர் தாவன் காயம்பட்டுள்ளதால் அவருக்குப் பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை 4ஆம் இடத்தில் இந்திய அணி களமிறக்கவுள்ளது.

ஏற்கெனவே 4ஆம் இடத்தில் களமிறங்கிய கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியுள்ளார். தவான் மற்றும் ரோகித் ஜோடி என்பது பல வருடங்கள் அனுபவமுள்ள சிறந்த ஜோடி, அத்துடன் தவான் உலகக் கோப்பை போன்ற முக்கிய தொடரில் சிறப்பாக விளையாடக் கூடியவர். கடந்த போட்டியில் கூட ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சதம் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். அப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேனின் இடத்தை ராகுல் நிரப்புவாரா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

முன்பெல்லாம் ராகுல் சுமாரான பேட்ஸ்மேனாக இருந்தாலும், ஐபிஎல் போட்டிகளுக்கு பின்னர் சிறந்த பேட்ஸ்மேனாக மாறியுள்ளார். ஐபிஎல் தொடரின் 14 போட்டிகளில் அவர் 593 ரன்கள் குவித்தார். எனவே அவர் தவான் இடத்தை பெரும்பாலும் பூர்த்தி செய்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று மிகக் குறைந்த போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள இளம் வீரரான விஜய் சங்கருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை அவர் பயன்படுத்திக் கொண்டால் அணியில் நீங்கா இடம் பிடிக்கலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close