[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி

டாஸ் வென்றது பாகிஸ்தான்: இந்திய அணி பேட்டிங்!

pakistan-win-the-toss-and-opt-to-bowl

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

12 ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று நடக்கிறது. மான்செஸ்டரில் நடைபெறும் இந்தப் போட்டி, 3 மணிக்கு தொடங்குகிறது. 

விராத் கோலி தலைமையிலான இந்திய அணி, நடப்புத் தொடரில் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியுடனான ஆட்டம் மழையால் ரத்தானது. பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2 ஆட்டங்களில் அந்த அணி தோல்வியடைந்த நிலையில், ஒரு போட்டி மழையால் ரத்தானது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இதுவரை 131 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. 

இதில் இந்திய அணி 54 ஆட்டங்களிலும், பாகிஸ்தான் அணி 73 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 4 ஆட்டங்களில் முடிவு எட்டப்பட வில்லை. உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் விளையாடியுள்ள 6 போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

இதற்கிடையே, டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்கிறது. தமிழக வீரர் விஜய் சங்கர், காயமடைந்துள்ள தவானுக்கு பதிலாக களமிறங்கியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close