[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

சச்சின் சாதனையை இன்று தகர்ப்பாரா விராத் கோலி?

virat-kohli-57-runs-away-from-another-sachin-tendulkar-record

விரைவாக 11 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை, இந்திய கேப்டன் விராத் கோலி இன்று படைக்க வாய்ப்பிருக்கிறது. 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை காண உலகம் முழுவதுமிருந்து ரசிகர்கள் மான்செஸ்டர் வந்துள்ளனர். அதிகமான ரசிகர்கள் பார்க்கும் போட்டியான இதற்கு கடும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் இன்றைய போட்டியில் சாதனை படைக்க இருக்கிறார், இந்திய கேப்டன் விராத் கோலி.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் அடித்த கோலிக்கு, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை தொட, இன்னும் 57 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இதை, அவர் நியூசிலாந்து எதிராக நடக்க இருந்த போட்டியில் எடுப்பார் என்று கூறப்பட்டது. அந்தப் போட்டி மழையால் ரத்து ஆனதால், அவர் சாதனை தள்ளிப்போனது. இதையடுத்து இன்றைய போட்டியில் அந்த சாதனையை விராத் செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பாக்கின்றனர். இன்று அவர் 57 ரன் எடுத்தால், மிக விரைவாக 11,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெறுவார். விராட் கோலி ஏற்கனவே, 10,000 ரன்களை விரைவாக கடந்த வீரர் என்ற சாதனையை செய்துள்ளார். 

விரைவில் 11 ஆயிரம் ரன்களை கடந்த வீரராக, இதுவரை சச்சின் இருக்கிறார். அவர் 276 போட்டிகளில் 11 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். கோலி இன்றைய போட்டியில் 57 ரன்கள் அடித்தால், 222 இன்னிங்ஸ்களில் 11 ஆயிரம் ரன்களை எட்டிவிடுவார். இதன்மூலம் சச்சினின் சாதனை தகர்க்கப்படும். 

சச்சின், கங்குலிக்கு பிறகு 11 ஆயிரம் ரன் எடுக்கும் 3-வது இந்தியர் என்ற சாதனையையும் சர்வதேச அளவில் 9-வது வீரர் என்ற பெருமையை யும் விராத் பெறுவார். 

30 வயதான விராத், 221 இன்னிங்சில் 10,943 ரன் எடுத்துள்ளார். இதில் 41 சதமும், 50 அரை சதமும் அடங்கும். இவரது சராசரி 59.47. அதிகபட்ச மாக 183 ரன் எடுத்துள்ளார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close