[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற கூட்டத் தொடர் நீட்டிப்பு? - மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS தோனியிடம் தேர்வுக்குழு பேச வேண்டும்: ஓய்வு விவகாரம் பற்றி சேவாக்!
  • BREAKING-NEWS கடத்தப்பட்ட குழந்தை '10 மணி' நேரத்தில் மீட்பு - வீட்டு பணிப்பெண் காதலனுடன் கைது
  • BREAKING-NEWS டி.என்.பி.எல். தொடர் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS விடிய விடிய தர்ணா - கர்நாடக சட்டப்பேரவையில் படுத்துறங்கிய எடியூரப்பா

விராத் கோலி வீடியோவை பார்த்து பயிற்சி எடுக்கும் பாகிஸ்தான் வீரர்!

babar-azam-learns-from-watching-virat-kohli-bat

விராத் கோலி பேட்டிங் செய்யும் வீடியோவை பார்த்து, தான் பயிற்சி எடுத்துவருவதாக பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம் தெரிவித்துள்ளார்

உலகக் கோப்பை தொடரில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன. இந்த போட்டிக்கு பயங்கர எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடரில் இந்தியாவை, பாகிஸ்தான் வென்றதில்லை என்ற நிலை இப்போதும் தொடரும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் ஆஸம், இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி ஆடும் வீடியோவை பயிற்சி எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். 67 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாபர், 9 சதம், 13 அரைசதங்கள் அடித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் தூணாக விளங்கும் இவரையும் விராத் கோலியையும் ஒப்பிட்டு கிரிக்கெட் வல்லுநர்கள் பேசி வருகின்றனர். 

இந்நிலையில் பாபர் ஆஸம் அளித்த பேட்டியில், ‘’விராத் கோலியின் பேட்டிங் ஸ்டைலை வீடியோவில் பார்த்து பயிற்சி எடுத்துவருகிறேன். பல்வேறு சூழ்நிலையில் அவர் எப்படி ஆடுகிறார் என்பதை கவனித்து, அதையே நானும் பின்பற்றுகிறேன். விராத் கோலியின் வெற்றி சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. அதை போல நானும் சாதிக்க நினைக்கிறேன். கடந்த 2 வருடத்துக்கு முன் நடந்த சாம்பியன் டிராபி இறுதிப் போட்டியில், இந்தியாவை வென்றது எங்கள் அணியின் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. அந்த வெற்றி எங்கள் நினைவை விட்டு எப்போதும் விலகாது.

இந்திய அணியில் சிறந்த பந்துவீச்சு இருக்கிறது என்பதும் தெரியும். அதே நேரம் நாங்களும் சிறந்த பந்துவீச்சை கொண்ட இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடி இருக்கிறோம். அதனால் அதை சரியாக கையாள்வோம்’’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close