[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
  • BREAKING-NEWS தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்
  • BREAKING-NEWS வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

முதலிடத்துக்கு முன்னேறுமா ஆஸி? இலங்கையுடன் இன்று மோதல்!

icc-world-cup-2019-australia-meets-srilanka-today

உலகக் கோப்பைத் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி, இலங்கை அணியை எதிர்கொள்கிறது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு நடக்கும்போட்டியில் தென்னாப்பிரிக்கா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பிற்பகல், 3 மணிக்கு நடக்கும் போட்டியில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, இலங்கையுடன் மோதுகிறது. 

ஆஸ்திரேலிய அணி, முதல் இரண்டு போட்டிகளில் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வென்றது. மூன்றாவது போட்டியில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது. நான்காவது போட்டியில் பாகிஸ்தானை வென்றது. இன்று நடக்கும் போட்டியில் இலங்கையை வென்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்குச் செல்லும்.

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவாக உள்ளது. பேட்டிங்கில் டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், சுமித், கவாஜா, மேக்ஸ்வெல், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஆகியோர் மிரட்டி வருகிறார்கள். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வார்னர் சதம் அடித்தார். பந்து வீச்சில் ஸ்டார்க், கம்மின்ஸ், கோல்டர் நைல் சவாலாக திகழ்கிறார்கள். சுழல் பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பா பெரிதாக சாதிக்கவில்லை. அதனால், இன்றைய போட்டியில் மற்றொரு சுழல் பந்துவீச்சாளரான நாதன் லியான் சேர்க்கப்படலாம் என தெரிகிறது. 

இலங்கை அணி, முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தானை வென்றது. பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. அந்த அணி, பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் தடுமாறி வருகிறது. பேட்டிங்கில் கேப்டன் கருணாரத்னே மட்டும் நின்று ஆடுகிறார். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்பதில்லை. காயமடைந்திருந்த வேகப்பந்துவீச்சாளர் நுவான் பிரதீப், குணமடைந்துவிட்டதால் இன்றைய போட்டியில் அவர் களமிறங்குவார். அதே போல, தனது மாமியார் இறந்ததால் இலங்கை சென்ற மலிங்கா, அணியில் மீண்டும் இணைந்துள்ளார். இவர்களின் வரவு அணிக்கு கூடுதல் தெம்பை அளிக்கும்.

அனைத்து வகையிலும் பலமான ஆஸ்திரேலிய அணியை வெல்வது அந்த அணிக்கு எளிதான காரியமல்ல. இருந்தாலும் இலங்கை அணி, வெற்றி பெற போராடும் என்று நம்பலாம். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close