[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டி: இங்கிலாந்து பந்துவீச்சு

england-vs-west-indies

 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. 

சவுதாம்டன் நகரில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்துஅணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து அணியில் எந்தவித மாற்றமும் இல்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் எவின் லூயிஸ், ரஸல் மற்றும் கேப்ரியல் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, நடப்புத் தொடரில் 3 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. ஜேசன் ஹோல்டர் தலைமையில் களமிறங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. தென்னாப்ரிக்கா அணியுடனான போட்டி மழையால் கைவிடப்பட்டது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் இதுவரை 101 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இங்கிலாந்து அணி 51 போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 44 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 6 போட்டிகளில் மழை உள்ளிட்ட காரணங்களால் முடிவு எட்டப்படவில்லை

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close