[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

“உலகக் கோப்பை வெல்வதில் பிரஷர் இல்லை.. ஆனால்” - ஹர்திக் ஓபன் டாக்

no-pressure-to-win-wc-as-only-1-5-bn-people-are-expecting-hardik

உலகக் கோப்பையை வெற்றி பெறுவதில் மன அழுத்தம் இல்லை, ஆனால் 150 கோடி மக்களின் எதிர்பார்ப்பே அழுத்தமாக இருக்கிறது ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த கோப்பையை எந்த அணி வெல்லும் என்று யாராலும் கணிக்க முடியாத வகையில் தொடர் சென்றுகொண்டிருக்கிறது. இந்தியா, நியூஸிலாந்து அணிகளை தவிர அனைத்து அணிகளும் மற்ற அணிகளிடம் தோல்வியை தழுவியுள்ளன. இந்நிலையில் நேற்று இந்தியாவும், நியூஸிலாந்து நேருக்கு நேர் மோதவிருந்த போட்டி மழையால் ரத்தானது. இதனால் இரண்டு அணிகளின் முழு பலம் வெளிப்படாமல் போய்விட்டது.

இந்தச் சூழலில் உலகக் கோப்பை தொடர் குறித்து பேசியுள்ள இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, “உலகக் கோப்பை வெல்வதில் எந்த அழுத்தமும் இல்லை. கோப்பையை நாங்கள் வெல்ல வேண்டும் என்ற 150 கோடி மக்களின் எதிர்பார்ப்பு மட்டுமே எங்களுக்கு அழுத்தம். கோப்பையை எனது கையில் ஏந்த நான் விரும்புகிறேன். அதை எப்போதெல்லாம் நினைக்கிறேனோ அப்போதெல்லாம் நான் அதீத நம்பிக்கையை பெறுகிறேன்” என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close