[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

“ஈரத்தில் விளையாடினால் காயம்படும்” - விராட் கோலி

virat-kohli-said-it-is-not-safe-to-play-don-t-want-an-injury-at-this-stage

நியூஸிலாந்திற்கு எதிரான போட்டி மழையால் நின்றிருந்தாலும், காயம்படாமல் இருப்பதில் மகிழ்ச்சி என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

உலகக் கோப்பை தொடரின் 18வது லீக் போட்டி இந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையே நடைபெறயிருந்தது. இங்கிலாந்தின் ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறயிருந்தப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 4 போட்டிகளில் விளையாடியுள்ள நியூஸிலாந்து அணி 3 போட்டிகள் வென்றும், இன்றைய போட்டியில் ஒரு புள்ளி பெற்றும் 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டு போட்டிகளில் வென்றுள்ள இந்திய அணி, இன்று ஒரு புள்ளியை பெற்று 5 புள்ளிகளுடன் 3 இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில் போட்டி ரத்தானது தொடர்பாக பேசிய விராட் கோலி, “போட்டி நடைபெறாதது அனைத்து நேரத்திலும் வருத்தத்தை தருவதில்லை. கிரிக்கெட் வீரர்களின் பார்வையில் இரண்டு அணிகளும் புள்ளிகள் பட்டியலில் எந்த இடம் பிடிக்கும் என்று பார்க்கப்படுகிறது. மைதானம் இன்று இருந்த நிலையில் விளையாடியிருந்தால் பாதுகாப்பற்றதாக இருந்திருக்கும். எனவே விளையாடாதது நல்லதுதான். 

இந்தச் சூழலில் காயம்பட நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் ஒரு சிறந்த கிரிக்கெட்டை விளையாட நினைக்கிறோம். நாங்கள் புள்ளிகள் பட்டியலில் எங்கிருக்கிறோம் என்ற கவலையில்லை. ஏனென்றால் 2 போட்டிகளில் வென்றிருப்பது எங்களுக்கு நம்பிக்கை தந்துள்ளது” என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close