[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

307 ரன்கள் குவித்து ஆஸி. ஆல் அவுட் - 5 விக்கெட்டுகள் வீழ்த்திய அமிர்

australia-vs-pakistan-match-17-308-runs-target-for-pak

பாகிஸ்தானிற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா 307 ரன்கள் குவித்துள்ளது.

உலகக் கோப்பை தொடரின் 17வது லீக் போட்டி பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதல் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஆரோன் ஃபின்ச் மற்றும் டேவிட் வார்னர் விக்கெட்டை இழக்காமல் விளையாடினர். 100 ரன்களை கடந்து சென்ற அவர்களின் ஜோடி ஆட்டம், பாகிஸ்தானை கலங்கடித்தது. ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 146 இருக்கும்போது, 82 (84) ரன்கள் எடுத்திருந்த ஃபின்ச் விக்கெட்டை இழந்தார். 

மறுமுனையில் வார்னர் நிலைத்து ஆடினார். ஆனால் அவருடன் யாரும் நீண்ட நேரம் ஜோடி சேர்ந்து ஆடவில்லை. சதம் அடித்த வார்னர் 107 (111) ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்தவர்கள் தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர். மேக்ஸ்வெல் 20 (10), ஷான் மார்ஸ் 23, அலெக்ஸ் கரே 20 (21) ரன்கள் எடுத்தனர். 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 307 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில் அபாரமாக பந்துவீசிய அமிர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது பாகிஸ்தான் அணி இலக்கை எதிர்த்து விளையாடி வருகிறது. 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 56 ரன்கள் சேர்த்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close