[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேரள அரசு வழங்கும் நீரை தமிழக அரசு ஏற்க மறுத்ததாக வந்த தகவலில் உண்மையில்லை - அமைச்சர் வேலுமணி
  • BREAKING-NEWS தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மாமூல் வசூல், லஞ்சம் வாங்கும் போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உள்துறை செயலர், டிஜிபி 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
  • BREAKING-NEWS வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

தவான் காயம்: இங்கிலாந்து பறக்கிறார் ரிஷாப் பன்ட்!

post-shikhar-dhawan-injury-rishabh-pant-to-take-the-flight

ஷிகர் தவான் காயம் அடைந்துள்ளதை அடுத்து, இளம் வீரர் ரிஷாப் பன்ட் இங்கிலாந்து செல்கிறார். 

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் அபாரமாக சதமடித்தார். இந்தப் போட்டியின்போது, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கம்மின்ஸ் வீசிய பந்து, தவானின் இடது கை பெருவிரலில் பலமாகத் தாக்கியது. வலியுடன் விளையாடிய தவான், 109 பந்தில் 117 ரன் குவித்தார். அந்த விரல் கடுமையாக வீங்கியதை அடுத்து, அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. அவருக்குப் பதில் ஜடேஜா பீல்டிங் செய்தார்.

இதனிடையே அவர் கை விரல் நேற்று ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. அதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது. அவர் 3 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால், அவர் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகுவதாகக் கூறப்பட்டது. 

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம், ஷிகர் தவான் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகத் தெரிவித்தது. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கிரிக்கெட் வாரியம், “ தவான், பிசிசிஐயின் மருத்துவக் குழு கண்காணிப்பில் தற்போது உள்ளார். அவரை இங்கிலாந்தில் தொடர்ச்சியாக வைத்திருக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அவர் காயத்தின் தன்மை தொடர்ச்சியாக கண்காணிக்கப் படும்” எனத் தெரிவித்துள்ளது.

இதனால் இந்திய அணி, அடுத்து மோத இருக்கும் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் மட்டுமே தவான் ஆட மாட்டார் என்றும் அதற்குள் காயம் குணமாகி விட்டால், அடுத்து நடக்கும் போட்டியில் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, மாற்று வீரராக, ரிஷாப் பன்ட்-டை கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்துக்கு அனுப்புகிறது. அவர் இன்று அல்லது நாளை அங்கு சென்று சேர்கிறார். ரிஷாப்பை அதிகார பூர்வ மாற்றுவீரராக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை. அப்படி அறிவித்தால், தவான் விரைவில் குணம் அடைந்தாலும் உலக கோப்பை போட்டியில் விளையாட முடியாது. அணியில் உள்ள மற்ற வீரர் யாராவது காயமாகி வெளியேறினால் தான் அவரை அணியில் மீண்டும் சேர்க்க முடியும் என்பதால், ரிஷாப்பை மாற்று வீரராக அறிவிக்கவில்லை.

இதற்கிடையே, தவானுக்கு பதிலாக கே.எல்.ராகுலை, தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நான்காவது இடத்தில் தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர் களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close