[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

முதல் வெற்றியை பதிவு செய்யுமா தென் ஆப்பிரிக்கா? - வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு

west-indies-opts-to-bowl-first-against-south-africa

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

உலகக் கோப்பை தொடரின் 15-ஆவது லீக் ஆட்டத்தில் சவுதாம்ப்டன் நகரில் இன்று நடைபெறும் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ்  அணி  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணியை பொருத்தவரை நடப்பு தொடரில் மூன்று தோல்விகளுடன் தடுமாறி வருகிறது. அத்துடன் அந்த அணியின் பேட்டிங் சிறப்பாக இல்லை. அதேபோல காயம் காரணமாக அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஸ்டெயின் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சும் சிறப்பாக இல்லை. மேலும் மற்றொரு பந்துவீச்சாளரான நிகிடியும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியை பொருத்தவரை கடந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் மிகவும் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் இன்றைய போட்டியில் மீண்டும் வெற்றிப் பெற முயற்சிக்கும். அதேபோல அந்த அணியின் பந்துவீச்சு சற்று பலமாகத் தான் உள்ளது. அந்த அணியில் காட்டிரல், தாமஸ் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். 

இந்த இரு அணிகளும் இதுவரை 6 உலகக் கோப்பை போட்டியில் விளையாடி உள்ளன. அதில் தென் ஆப்பிரிக்கா 4 போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டியிலும் வெற்றிப் பெற்றுள்ளன. இன்றைய போட்டியில் வெற்றிப் பெற இரு அணிகளுமே முயலும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close