[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

வார்னர் விளாசிய பந்து தாக்கி இந்திய வம்சாவளி வீரர் படுகாயம்!

indian-origin-net-bowler-hospitalised-after-getting-hit-on-head-by-warner-shot

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர் அடித்த பந்து தாக்கியதில் இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரர் படுகாயமடைந்தார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா- இந்தியா மோதும் போட்டி இன்று நடக்கிறது. இதற்கான பயிற்சியில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று ஈடுபட்டிருந்தனர். 

அப்போது வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த டேவிட் வார்னருக்கு இங்கிலாந்தை சேர்ந்த மித வேகப்பந்துவீச்சாளர் ஜெய் கிஷான் பந்துவீசினார். அப்போது வார்னர் அடித்த பந்து, நேராக ஜெய்கிஷான் தலையில் பலமாகத் தாக்கியது. இதில் அவர் மைதானத்தில் சுருண்டு விழுந்தார். உடனடி யாக மருத்துவக் குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அவர், தலை கடுமையாக வலிக்கிறது என்று கூறியதை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த வார்னர், சிறிது நேரம் பயிற்சியில் ஈடுபடமால் இருந்தார். அடிபட்ட வீரருக்கு பயப்படும் வகையில் காயம் இல்லை என்று அறிந்த பிறகு மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டார். காயமடைந்த ஜெய் கிஷான் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close