[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சு 

new-zealand-opt-to-bowl-against-afghanistan

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

உலகக் கோப்பை தொடரில் இன்று டான்ட்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து Vs ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தப் போட்டிக்கு ஆப்கானிஸ்தான் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஆஃப்டப், நூர் அலி மற்றும் இக்ரம் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 

நடப்பு உலகக் கோப்பை  தொடரில் விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதனால் இன்றைய போட்டியிலும் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றிப் பாதையில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் விளையாடிய இருப் போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்று தனது வெற்றி கணக்கை தொடங்க போராடும். அத்துடன் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் நியூசிலாந்து அணிக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close