[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்
  • BREAKING-NEWS “கல்வியை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது...”சூர்யா கொடுத்த பதிலடி
  • BREAKING-NEWS “மோடி அரசு சூட்கேஸ் தூக்கும் அரசு இல்லை” - நிர்மலா சீதாராமன்

இந்திய தூதர் இல்லத்தில் ’டீம் இந்தியா’ !

team-india-visit-high-commissioner-s-residence-in-london

பிரிட்டனுக்கான இந்திய தூதரை, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சந்தித்து குழுப்‌புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி, தனது முதல் போட்டியில் தென்னாப்பாரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது.

அடுத்து, நாளை நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இதற்கான பயிற்சியில் இந்திய கிரிக்கெட் அணி நேற்று ஈடுபட முயன்றது. தொடர்ந்து மழை பெய்ததால் பயிற்சியில் ஈடுபடவில்லை. 

இதற்கிடையே, பிரிட்டனுக்கான இந்திய தூதர் ருச்சி கனஷ்யாமை இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சந்தித்தனர். லண்டனில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்ற விராத் கோலி தலைமையிலான அணியினருக்கு, தூதரகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

 இதைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்களுடன் ருச்சி, குழுப்புகைப்படம் எடுத்துக் கொண்டார்.  இதை இந்திய கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் பதிட்டுள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close