[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா..? அசத்திய இந்திய அணி..!

rohit-sharma-puts-india-in-record-books-south-africa-hit-new-low-and-other-stats

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி சில சாதனைகளை படைத்துள்ளது.

உலகக் கோப்பை தொடரில் சவுதம்டன் நகரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி ரோகித் ஷர்மாவின் சதத்தால் வெற்றி இலக்கை 47.3 ஓவர்களில் எட்டியது. இதன் மூலம் உலகக் கோப்பை பயணத்தை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியுள்ளது. 

இந்தப் போட்டியில் இந்திய அணி சில சாதனைகளை படைத்துள்ளது. அவை என்னென்ன?

நேற்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர் ஹசிம் ஆம்லாவை அவுட்டாக்கியது மூலம் இந்திய வீரர் பும்ரா இதுவரை மூன்று முறை ஹசிம் ஆம்லாவை ஆட்டமிழக்க செய்துள்ளார். அத்துடன் நேற்றைய போட்டியில் ரோகித் ஷர்மா அடித்த சதம் உலகக் கோப்பையில் இந்தியா சார்பில் அடிக்கப்பட்ட 26-ஆவது சதமாகும். இதன்மூலம் இந்திய அணி ஆஸ்திரேலியாவின் அதிக சதங்களான 26ஐ சமன் செய்துள்ளது. 

இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியின் சாஹல் 32 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது இந்தியா சார்பில், முதல்முறையாக உலகக் கோப்பை போட்டி விளையாடும் பந்துவீச்சாளரின் சிறப்பான பந்துவீச்சாகும். இதற்கு முன் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது முதல் உலகக் கோப்பை போட்டியில் செய்த சிறந்த பந்துவீச்சான 4/35 என்பதை முறியடித்துள்ளார். 

மேலும் 2015 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு 2019 உலகக் கோப்பை வரை அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் ஷர்மா முதலிடம் பிடித்துள்ளார். ரோகித் ஷர்மா இந்தக் காலத்தில் 130 சிக்சர்கள் விளாசியுள்ளார். அத்துடன் இந்தியா சார்பில் ஒருநாள் போட்டியில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் ஷர்மா மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இவர் சவுரவ் கங்குலியின் 22 சதங்களை முறியடித்துள்ளார்.

இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றதன் மூலம் கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை முதல், தற்போது வரை உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி பெற்ற 15வது வெற்றி இதுவாகும். அதாவது இந்திய அணி 2011 உலகக் கோப்பையில் 7 வெற்றியும், 2015 உலகக் கோப்பையில் 7 வெற்றியும் பெற்றுள்ளது. இதன்மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் அதிக வெற்றி சதவீதம் பெற்ற அணியாக அணியாக இந்திய உருவெடுத்துள்ளது. இந்திய அணியின் உலகக் கோப்பை போட்டி வெற்றி சதவிகிதம் 83.33ஆக உள்ளது. இது ஆஸ்திரேலியா அணியின் 80.00 வெற்றி சதவிகிதத்தைவிட அதிகம். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close