[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

வெற்றியுடன் தொடங்குமா இந்தியாவின் உலகக் கோப்பை பயணம்?- இந்தியா பந்துவீச்சு

world-cup-2019-india-opts-to-bowl-first-against-sa

இந்தியாவிற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது  

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி சவுதாம்ப்டன் நகரில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற  தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

இந்திய அணியில் ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராட் கோலி, தோனி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, குல்தீப் யாதவ், சாஹல், கேதர் ஜாதவ், புவனேஸ்வர் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

தென் ஆப்பிரிக்கா அணியில் டி காக், ஹசிம் ஆம்லா, டேவிட் மில்லர், ஷாம்சி, டூபிளசிஸ், டுமினி, மொரிஸ், ரபாடா, தாஹிர், ராஷி வான் டர் டஸ்ஸன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த உலகக் கோப்பை தொடரில் ஏற்கெனவே இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணியிடம் தென் ஆப்பிரிக்கா அணி தோற்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்த உலகக் கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை தென் ஆப்பிரிக்கா அணி பதிவு செய்ய முனைப்பாக உள்ளது.

அதேசமயம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்க இந்தியா போராடும் என்பதால் இந்தப் போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது. இதுவரை இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் 4 உலகக் கோப்பை போட்டியில் விளையாடியுள்ளனர். அதில் தென் ஆப்பிரிக்கா 3 போட்டிகளிலும், இந்தியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் இன்றைய போட்டியில் 50% மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை நிலவரம் கணித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close