[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

வெற்றியுடன் தொடங்குமா விராட் கோலி படை?: தென்னாப்ரிக்க அணியை எதிர்கொள்ளும் இந்தியா!

india-take-on-south-africa-in-match-8-of-icc-cricket-world-cup

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்திய அணி, இன்று தென்னாப்ரிக்க அணியை எதிர்கொள்கிறது. 

ரசிகர்களுக்கு விருந்துபடைத்து வரும் 12ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் , இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகள் இடையிலான போட்டி சவுதாம்ப்டன் நகரில் இன்று  நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் ஆயத்தமாகி வருகிறது. அனுபவ வீரர்கள் தோனி, ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் , லோகேஷ் ராகுல் ஆகியோர் இந்திய அணிக்கு கை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் அசத்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. பந்துவீச்சில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி ஆகியோரை நம்பி களம் காண்கிறது இந்திய அணி.

டூப்ளஸ்சி தலைமையிலான தென்னாப்ரிக்க அணி, நடப்பு உலகக்கோப்பை தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளிடம் தோல்வியடைந்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் காயத்தால் தொடரில் இருந்து விலகியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா - தென்னாப்ரிக்‌கா அணிகள் இதுவரை 83 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் தென்னாப்ரிக்க அணி 46 போட்டிகளிலும், இந்திய அணி 34 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வர தென்னாப்ரிக்காவும், வெற்றியுடன் தொடங்க இந்தியாவும் முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள‌து

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close