[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

ஆரம்பம் முதலே தடுமாற்றம்: 136 ரன்களுக்கு சுருண்ட இலங்கை!

sri-lanka-have-been-bowled-out-for-136

நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 136 ரன்களுக்கே இலங்கை அணி சுருண்டது 

2019 உலகக் கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணியும் நியூசிலாந்து அணியும் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து இலங்கை அணி பேட்டிங்கை தொடங்கியது. ஆரம்பம் முதலே இலங்கை வீரர்கள் தடுமாற்றத்துடனே விளையாடினர். 

இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார். திஷாரா 27 ரன்களும், குசல் பேராரா 29 ரன்களும் எடுத்தனர். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்து செல்ல இலங்கை அணி தடுமாறியது. இறுதியாக 29.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே இலங்கை எடுத்தது. நியூசிலாந்தை பொறுத்தவரை மேட் ஹென்ரி மற்றும் லாக்கி பெர்குஷான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

137 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு நியூசிலாந்து களம் இறங்கவுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close