[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

உலகக் கோப்பையில் இன்று 2 போட்டி: ஆஸி- ஆப்கான், நியூசி-இலங்கை மோதல்!

world-cup-2019-two-league-games-today

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தில் நடந்து வருகிறது. கடந்த 30 ஆம் தேதி நடந்த முதல் போட்டியில், இங்கிலாந்து-தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. நேற்று நடந்த போட்டியில், வெஸ்ட் இண்டீஸ்- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன.

முதல் போட்டியில், நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. கார்டிஃப் நகரில் நடைபெறும் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்குகிறது. மற்றொரு போட்டியில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி- ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறது. பிரிஸ்டல் நகரில் நடைபெறும் இந்த போட்டி, இந்திய நேரப்படி மாலை ஆறு மணிக்குத் தொடங்குகிறது.

இலங்கை அணி, சமீப காலமாக, தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. தனது கடைசி 9 ஒரு நாள் போட்டியில் 8-ல் தோல்வியை சந்தித்துள்ளது. உலகக் கோப்பை பயிற்சி போட்டிகளிலும் அந்த அணி, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை அது இன்று எதிர்கொள்கிறது. அந்த அணியில் அனுபவ வீரர் மலிங்கா, சுரங்கா லக்மல், ஜெப்ரே வாண்டர்சே ஆகியோர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட வாய்ப்பிருக்கிறது.  பேட்டிங்கில், கேப்டன் கருணாரத்னே, திரிமன்னே, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, அனுபவ வீரர் மேத்யூஸ், திசரா பெரேரா ஆகியோர் நின்று ஆடினால் இன்றைய போட்டியில் வெற்றி பெறலாம்.

நியூசிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பான ஃபார்மில் இருக்கிறது. கப்தில், ராஸ் டெய்லர், வில்லியம்சன் ஆகியோர் அசத்துகின்றனர். வேகப்பந்துவீச்சில், போல்ட், டிம் சவுதி, சுழற்பந்துவீச்சில் சான்ட்னர், சோதி ஆகியோர் சிறப்பாக விளையாடுகின்றனர்.
ரன் குவிப்புக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் நியூசிலாந்து மிரட்டும். அதை கட்டுப்படுத்த இலங்கை போராட வேண்டியிருக்கும். 

பிரிஸ்டலில் மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஸ்மித், வார்னர் வருகைக்கு பிறகு வலுவான நிலையை அடைந்திருக்கும் ஆஸ்திரேலிய அணி, ஆப்கானை எளிதாக வென்று விடும் என்று கூறப்படுகிறது. ஆனால், ஆப்கான் அணியை சாதாரணமாக எடை போட முடியாது. அந்த அணியில், ரஷித் கான், முகமது நபி ஆகியோர் சுழலில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தண்ணி காட்ட வாய்ப்பிருக்கிறது. இதனால் இந்த போட்டியிலும் விறு விறுப்புக்கு பஞ்சமிருக்காது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close