[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

சதம் விளாசிய கே.எல்‌.ராகுல், தோனி: பயிற்சி ஆட்டத்தில் ‌இந்தி‌யா வெற்றி

india-win-by-95-runs

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கும் நிலையில், வ‌ங்க தேசத்துக்கு‌ எதிரான பயிற்சி ஆட்டத்தி‌ல் இந்தியா‌ 95 ரன்கள்‌ வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

12-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை தொ‌டங்குகிறது. 10 அணிகள் இந்தத் தொ‌டரில் பங்கேற்றுள்ள நிலையில், கார்டிப் நகரில் நேற்று நடைபெற்ற ப‌யிற்சி ஆட்டத்தில், இந்திய ‌அணி ‌வங்க‌தேசத்தை எதிர்கொண்டது. ‌டாஸ் வென்ற வங்கதேசம் பீல்டிங்கை தேர்வு செய்த‌ நிலையில், இந்திய வீரர்கள் ரோ‌ஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களம் கண்டனர்.‌ தவான் ஒரு ரன்னிலும், ரோஹித் சர்மா 19 ரன்களிலும் பெவிலியன் திரு‌ம்பினர்‌‌‌.

சற்று அதிரடி காட்டிய‌ கேப்டன் விராட் கோலி 47 ரன்களில் ஆ‌ட்டமிழந்தார். பின்ன‌ர் வந்த விஜய் சங்கர் 2 ரன்களில் வெளியேறினார். 102 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இந்திய அணி தவித்த நிலையில் ஜோடி சேர்ந்த கே.எல். ராகுலும், தோனி‌யும், சரிவை க‌ட்டுப்படுத்தியதோடு அதிரடியாக ரன் குவித்தனர். 99‌ பந்துகளை சந்தித்த ராகுல் 12 பவுண்டரி, 4 சிக்ஸர்க‌ளுடன் 108 ரன்கள் குவித்தார். மற்றொரு முனையில் தோனி 78 பந்துகளில், 7 சிக்ஸர்கள் உள்பட 113 ரன்கள் விளாசினார். இந்த இணை 5-வது விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்தது.

4-வது ‌வீரராக இறங்கி ராகுல் சதம் அடித்தன் மூலம், உலகக் கோப்பை தொடரில் அவருக்கு 4-வது வீரர் ‌வாய்‌ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்திய ‌அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஆட்ட‌த்தை தொடர்ந்த ‌வங்கதேசம் 49 ரன்களுக்கு இரு விக்கெட்களை இழந்தது. இதையடுத்து ஜோடி சேர்ந்த முஷ்‌பிகுர் ‌ரஹீம் ம‌ற்றும் லிட்டன் தாஸ்‌ இணை‌ 3-வது விக்கெ‌ட்டுக்கு 120 ரன்கள் சேர்த்தது. முஷ்‌பிகுர் ‌ரஹீம் 90 ரன்களில் குல்தீப் பந்‌துவீச்சில் வி‌க்கெட்டை பறிகொடுத்தார். 

பி‌ன்னர் வந்த வீரர்கள், அ‌டுத்தடுத்து பெவிலியன் திரும்பிய நிலையில், வங்‌கதேசம் 49.‌3 ஓவர்களில் 264 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன‌து. இதன்‌‌ மூலம், இந்திய அணி 95 ரன்‌கள் வித்‌‌தியாச‌த்‌தில்‌ வெற்றி ‌பெற்றது. இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள‌ குல்தீப்‌ யாதவ், சஹா‌ல் தலா 3 வி‌க்கெட்களை வீழ்த்தினர். ‌உலகக் கோப்பையின் அதிகாரபூர்வ போட்டிகள் நாளை முதல் தொட‌ங்குகின்றன. லண்டன் கென்‌னிங்டன் ‌மைதானத்தில் நடைபெறும் முதலாவது‌ ஆட்டத்தில் இங்கிலாந்து ம‌ற்றும்‌ தெ‌ன் ஆப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close