[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

யாரென்று நிரூபித்த தோனி - மீண்டும் சிக்கலில் 4வது இடம்..?

dhoni-prove-himself-with-century-again-critical-in-4th-place

பங்களாதேஷ் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடிய தோனி 113 ரன்களை குவித்து மாஸ் காட்டியுள்ளார்.

இந்திய அணியில் நீண்ட காலமாக தீராத பிரச்னை பேட்டிங்கில் 4வது இடம். இந்த இடத்தை இன்னும் நிரந்தரமாக யாரும் பிடிக்கவில்லை. உலகக் கோப்பையே வந்துவிட்டது இன்னும் இந்திய அணி பேட்டிங் ஆர்டரில் திருப்தி அடையவில்லை. கடைசி வாய்ப்பாக உலகக் கோப்பை பயிற்சிப் போட்டியை பயன்படுத்திக்கொள்ள இந்திய அணி திட்டமிட்டிருந்தது. தற்போது அதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணி விளையாடிய முதல் பயிற்சிப் போட்டியில் 4வது இடத்தில் கே.எல்.ராகுல் களமிறக்கப்பட்டார். ஆனல் அன்றைய தினம் அவர் 6 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். 6வது இடத்தில் இறங்கிய தோனி 17 ரன்களில் அவுட் ஆகினாலும் 42 பந்துகளை சந்தித்தார். இதனால் முக்கிய இடமான 4வது இடத்தை தோனிக்கு கொடுக்கலாம் என்ற பேச்சு எழுந்தது. அதேசமயம் அன்றைய போட்டியில் கேதர் ஜாதவ் விளையாடவில்லை என்பதால் அவரை ஒருமுறை சோதிக்க இந்திய அணி திட்டமிட்டது.

ஆனால் பங்களாதேஷ் அணிக்கு இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் பயிற்சிப் போட்டியிலும் விளையாட முடியாத நிலையிலேயே கேதர் ஜாதவ் இருக்கிறார். இதனால் மீண்டும் கே.எல்.ராகுலுக்கு 4ஆம் இடம் வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ராகுல், அபாரமாக விளையாடி 99 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார். இதனால் ராகுல் பக்கம் அனைவரது பார்வையும் குவிந்தது. ஆனால் 6ஆம் இடத்தில் இறங்கிய தோனி 78 பந்துகளில் 113 ரன்களை விளாசி, ராகுலை மிஞ்சினார். அத்துடன் தான் யார் ? என்பதை புரிய வைக்கும் வகையிலும் தோனி பேட்டிங்கில் அசத்தினார். இதற்கிடையே வந்த விஜய் ஷங்கர் 2 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றியது குறிப்பிடத்தக்கது.

இதனால் மீண்டும் 4வது இடத்தில் தோனியா ? ராகுலா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close