ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், மைக்கேல் கிளார்க், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விராத் கோலி என்று பாபர் ஆஸமை புகழ்ந்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள கிரிக்கெட் அணிகள், அங்கு பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய பயிற்சி ஆட்டம் கடந்த 24 ஆம் தேதி பிரிஸ்டலில் நடந்தது.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி, 47.5 ஓவர்களில் 262 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியில் மூன்றாவது வீரராக களமிறங்கிய பாபர் ஆஸம் அபாரமாக ஆடி, சதம் அடித்தார். அவர் 108 பந்துகளில் 112 ரன் எடுத்தார். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இந்தப் போட்டியில் ஆப்கான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விராத் கோலி என்று பாபர் ஆஸமை புகழ்ந்தார். அந்த போட்டியை வர்ணனை செய்த அவர், ‘’பாபர் ஆஸம் சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் பாகிஸ்தானின் விராத் கோலி. அந்த அணி, அரையிறுதி அல்லது இறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் இளம் வீரர்கள் பொறுப்புடன் ஆட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
பாபர் ஆஸம் ஏற்கனவே சில சாதனைகளை படைத்துள்ளார். டி20 போட்டியில் வேகமாக ஆயிரம் ரன்களை கடந்தவர் இவர்தான். அதே போல, 21 ஒரு நாள் போட்டிகளிலேயே, ஆயிரம் ரன்னை கடந்தும் சாதனை படைத்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக வாக்காளர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு
பொறியியல் படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் டெட் எழுதி ஆசிரியர் ஆகலாம் - தமிழக அரசு
கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படுமா..? நிர்மலா சீதாராமன் விளக்கம்..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!