[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேரள அரசு வழங்கும் நீரை தமிழக அரசு ஏற்க மறுத்ததாக வந்த தகவலில் உண்மையில்லை - அமைச்சர் வேலுமணி
  • BREAKING-NEWS தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மாமூல் வசூல், லஞ்சம் வாங்கும் போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உள்துறை செயலர், டிஜிபி 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
  • BREAKING-NEWS வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

வீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திடீர் தடை!

pcb-bans-wives-and-family-from-travelling-with-team

கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினரை தங்களுடன் இங்கிலாந்து அழைத்துச் செல்ல, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திடீர் தடை விதித்துள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் இரு தரப்பு தொடரில் பங்கேற்றது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி, ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு புது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, வீரர்கள் தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினரை தங்களுடன் தங்க வைக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டில் மட்டுமே வீரர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குடும்பத்தினர் உடன் இருந்தால் கவனம் சிதறலாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அப்படியே தங்க வைக்க வேண்டும் என்றால் தனிப்பட்ட முறையில் அவர்கள் தங்க வைத்துக்கொள்ளலாம் என்றும் அதற்கான செலவு உள்ளிட்ட விஷயங்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பொறுப்பாகாது என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கு முன் இருதரப்பு போட்டிகள் நடக்கும்போது, பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினரை தங்களுடன் அழைத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இப்போது அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், ஹரிஸ் சோகைலுக்கு மட்டும் தனிப்பட்ட காரணங்களுக்காக, தனது குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்ல, சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close