[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா

“இங்கிலாந்திடம் இருப்பது இந்திய அணியிடம் இல்லை” - நாஸர் ஹுசைன்

icc-world-cup-2019-i-would-be-fearful-nasser-hussain-on-difference-between-england-india

இங்கிலாந்து அணியில் உள்ளதைப் போல் இந்திய அணியிடம் பேட்டிங் பலம் இல்லை என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் நாஸர் ஹுசைன் கூறியுள்ளார். 

உலகக்கோப்பைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தத் தொடரில் எதிரணியை மிரட்டும் 6 வீரர்களை ஹுசைன் கணித்துள்ளார். அவரது கணிப்பின் படி, விராட் கோலி, கேனே வில்லியம்சன், கிறிஸ் கெயில், அண்ட்ரூ ரஸல், ரஷித் கான் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் இந்த உலகக் கோப்பை தொடரில் ஜொலிப்பார்கள்.

              

மேலும், இங்கிலாந்து அணி மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது என்று ஹுசை கூறியுள்ளார். “நான் இங்கிலாந்து அணிக்கு எதிராக கேப்டனாக இருந்திருந்தால், அவர்களை கண்டு மிரண்டு போயிருப்பேன். தற்போதைய அணியில் உள்ள பலரும் மிரட்டுகிறார்கள். தொடர்ந்து நான்கு போட்டிகளில் 300 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்கள். 

          

முன்பு ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடும் போது, அவர்களது முதல் 5 விக்கெட்டை சாய்த்துவிடுவோம். ஆனால், கில்கிறிஸ்ட் கடைசி வரை இருந்து ஆட்டத்தை உங்களிடம் இருந்து எடுத்துச் சென்றுவிடுவார். அதற்போல், இங்கிலாந்து அணியில் முதல் 5 விக்கெட் வீழ்ந்தாலும் ஸ்டோக்ஸ், மொயின் அலி போன்ற வீரர்கள் இருக்கிறார்கள்.  

ஒருநாள் தொடரில் முதல் இரண்டு இடத்தில் உள்ள இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் என்ன வித்தியாசம் என்றால், இங்கிலாந்து அணியிடம் வலுவான பேட்டிங் பலம் உள்ளது. அது உண்மையில் இந்திய அணியிடம் இல்லை. அதேபோல், அவர்களின் பந்துவீச்சும் மிகவும் சிறப்பானதாக இல்லை” என்று அவர்  கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close