[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

“என்ன ஆனாலும் தோனி சொன்னால் கேட்போம்” - சாஹல்

icc-world-cup-2019-you-need-mahi-bhai-we-still-obey-him-yuzvendra-chahal-on-ms-dhoni

‘என்ன ஆனாலும் தோனி சொன்னால் கேட்போம்’ என இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் யஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார்.

அணியில் குல்தீப் யாதவ் உடன் இணைந்து விளையாடுவது குறித்து சாஹல் கூறும்போது, “நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்துள்ளோம். நாங்கள் அனைத்து நிலையிலும் அதை கடைபிடித்து வருகிறோம். ஆட்டத்தின் போக்கை புரிந்துகொண்டு அதற்கேற்றதுபோல நாங்கள் எதாவது செய்வோம். எங்களின் போக்கை நாங்கள் மாற்றிக்கொள்ளப் போவதில்லை. குல்தீப் எனது தம்பி போன்றவர். நாம் வீழ்ச்சி அடையும் போது சிலரிம் மனம் விட்டு பேச நினைப்போம். அப்போது நான் குல்தீப்பிடம் பேசுவேன். நான் கடினமான சூழ்நிலைகளை சந்திக்கும்போது அவர் என்னிடம் பேசுவார். நாங்கள் இருவரும் ஒன்றாக அணியில் விளையாடம்போது நாங்கள் தொடர்பில் இருப்போம்” என்றார்.

தோனி குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய சாஹல், “என்ன ஆனாலும் மஹி பாய் சொன்னால் அதை நாங்கள் கேட்போம். நாங்கள் தவறாக செல்லும்போது அவர் எங்களை வழி நடத்துவார். நாங்கள் அறிமுகமான முதல் போட்டியில் தோனியின் பேச்சை எப்படி கேட்டோமோ அது இன்றும் மாறவில்லை. நாங்கள் சுயமாக ஏதேனும் திட்டம் தீட்டினால் அதை தோனியிடம் பகிர்ந்துகொள்வோம்” என்றார். 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டு ஸ்பின் பவுலர்களில் ஒருவர் யஸ்வேந்திர சாஹல். குல்தீப் யாதவ் சுழற்பந்தில் சிறப்பாக விளையாடிய போதிலும், சாஹல் சில நேரங்களில் மிரட்டலாக பந்துவீசி எதிரணியின் விக்கெட்டுகளை சரிக்கக்கூடியவர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close