[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு
  • BREAKING-NEWS மருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்
  • BREAKING-NEWS அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்

''உங்களுக்கெல்லாம் ஒரு ரகசியம் சொல்கிறேன்'' - வைரலாகும் தோனி வெளியிட்ட வீடியோ

ms-dhoni-reveals-he-wanted-to-be-an-artist

தான் வரைந்த ஓவியத்தை காட்டி தோனி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது

இந்திய அணியைப் பொறுத்தவரை அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட வீரர்களில் ஒருவர் தோனி. இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணிக்காக இவர் விளையாடுவதால், தமிழகத்தில் இவருக்கு கூடுதலான ரசிகர்கள் இருக்கிறார்கள். கேப்டன் கூல், மஹி, எம்எஸ்டி, தல உள்ளிட்ட பல பெயர்களில் உலா வருகிறார் தோனி. கிரிக்கெட், பைக் என ஆர்வம் கொண்டுள்ள தோனி தற்போது தன்னுடைய புதிய பொழுதுபோக்கு ஒன்று குறித்தும் பேசியுள்ளார்.

இது குறித்து தோனி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு கிரிக்கெட் பிடித்திருந்தாலும் எனக்கு ஓவியம் வரைவதிலும் விருப்பம் உண்டு என தெரிவித்துள்ளார். மேலும் ''நான் சில ஓவியங்களையும் வரைந்துள்ளேன். என்னுடைய முதல் ஓவியக் கண்காட்சியை விரைவில் நடத்த உள்ளேன். அதற்கு இன்னும் சில காலம் ஆகும்.

ஓவியம் தெரிந்தவர்கள் எனது ஓவியத்தை பார்த்து அறிவுரைகளை கூறுங்கள். நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்'' என்று  தெரிவித்துள்ளார். மேலும் தோனி வரைந்த சில ஓவியங்களையும் காண்பித்து அது குறித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டார். 

தோனியின் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. கிரிக்கெட்டை போல ஓவியத்திலும் தல வெளுத்து வாங்குவார் என ரசிகர் பலரும் பதிவிட்டு வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close