[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

“தோனியை ‘ஆத்தங்வாதி’ என்றே அழைப்போம்” - பழைய நண்பர் பேட்டி

we-used-to-call-dhoni-a-terrorist-says-bihar-team-mate-satya-prakash

தோனியை நாங்கள் தீவிரவாதி என்றே அழைப்போம் என அவருடன் 2000-ஆம் ஆண்டு வாக்கில் கிரிக்கெட் ஆடிய சத்ய பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் பலரும் கொண்டாடும் வீரர் மகேந்திர சிங் தோனி. பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான அவர், 2000-ஆம் ஆண்டு வாக்கில் பீகார் அணிக்காக விளையாடினார். அப்போது தோனியுடன் விளையாடிய வீரர்தான் சத்ய பிரகாஷ். அவர் தோனியின் அந்தக் காலத்தை பற்றி நினைவு கூர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “ தோனியை நாங்கள் அட்டங்வாடி (தீவிரவாதி) என்றே அழைப்போம். அவர் வழக்கமாகவே 20 பந்துகளில் 40 முதல் 50 ரன்களை குவிப்பார். ஆனால் நாட்டிற்காக அவர் விளையடும் அவரது அணுகுமுறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எந்தவொரு விஷயத்தையும் காது கொடுத்து கேட்பவர் தோனி. அப்போதெல்லாம் எப்போதாவது தான் தோனி கேப்டனாக இருப்பார். அதேபோல வழக்கமாகவே இந்தி மொழிதான் பேசுவார். ஆனால் இப்போது ஆங்கிலத்திலும் சரளமாக பேசுகிறார்” என்றார்.

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணியில் தோனி இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரிகயான காசி விஸ்வநாதன், அடுத்த ஆண்டு சென்னை அணியில் தோனி நிச்சயம் இருப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close