[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

உலகக் கோப்பையில் கங்குலி உட்பட 3 இந்திய வர்ணனையாளர்கள்!

sourav-ganguly-among-3-indian-commentators-for-cricket-world-cup-2019

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுரவ் கங்குலி உட்பட 3 இந்திய வர்ணனையாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்திய அணியில், ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராத் கோலி, விஜய் ஷங்கர், தோனி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், முகமத் ஷமி, புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணி வரும் 22ஆம் தேதி இங்கிலாந்து செல்ல இருக்கிறது. 

இங்கிலாந்து மைதானங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளதால், பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உலக கோப்பை தொடருக்கான 24 வர்ணனையாளர்களை ஐசிசி அறிவித்துள்ளது. 

(சஞ்சய் மஞ்சரேக்கர்)

இந்தியா சார்பில், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் மற்றும் ஹர்ஷா போக்ளே ஆகியோர் வர்ணனை செய்ய இருக்கின்றனர். 

மேலும், மைக்கேல் கிளார்க், குமார் சங்ககாரா (இலங்கை), பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து), ஷான் பொல்லாக் (தென்னாப்பிரிக்கா), மைக்கேல் ஹோல்டிங் (வெஸ்ட் இண்டீஸ்), கிரீம் ஸ்மித் (தென்னாப்பிரிக்கா), வாசிம் அக்ரம், ரமீஸ் ராஜா (பாகிஸ்தான்),

(ஹர்ஷா போக்ளே)

நாசர் ஹூசைன் (இங்கிலாந்து), சைமன் டோல் (நியூசிலாந்து), மைக்கேல் சிலேட்டர் (ஆஸ்திரேலியா), மார்க் நிகோலஸ் (இங்கிலாந்து) உட்பட 24 பேர் வர்ணனையாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close