[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS 5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
  • BREAKING-NEWS காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்

நலம் பெறுவாரா கேதார் ஜாதவ் ? உலகக் கோப்பைக்காக 22ஆம் தேதி புறப்படும் இந்திய அணி

indian-cricket-team-to-leave-for-world-cup-on-may-22-kedar-jadhav-expected-to-be-fit

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வரும் 22ஆம் தேதி இங்கிலாந்து புறப்படுகின்றனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் மே 30ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள லண்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்காக அனைத்து நாடுகளும் தங்கள் அணிகளை அறிவித்துவிட்டன. இந்திய அணியில் ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராட் கோலி, கேதர் ஜாதவ், விஜய் ஷங்கர், தோனி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், யஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமத் ஷமி, புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சிப் போட்டிகள் வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது. முதல் நாள் நடைபெறும் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான், இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இரண்டாம் நாளான மே 25ஆம் தேதியன்று இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் களம் காணுகின்றன.

இந்த பயிற்சிப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வரும் 22ஆம் தேதி இங்கிலாந்து பறக்கவுள்ளனர். ஆனால் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் கேதார் ஜாதவ், நடந்து முடிந்து ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை. ஆனால் அவர் விரைவாக நலம் பெற்று வருகிறார். இருப்பினும் 22ஆம் தேதிக்குள் அவர் நலம் பெற வேண்டும் என்பது கட்டாயமாகும். இல்லாத பட்சத்தில் அவர் தொடரிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேறொரு வீரர் அணியில் சேர்க்கப்படுவார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close