[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

ரசிகர்கள் அன்பால் உருகிய வாட்சன் - நன்றி தெரிவித்த வீடியோ

watson-released-thank-video-in-instagram-for-his-fans

கடந்த சில தினங்களாக தனக்கு பாராட்டுகளையும், அன்பையும் அளித்த கிரிக்கெட் ரசிகர்‌களுக்கு நன்றி தெரிவித்து வாட்சன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து தனது இன்ஸ்ட்டாகிராம் ‌பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள வாட்சன், மும்பை அணியுடனான ஐபிஎல் இறுதி போட்டி வெற்றிக் கோட்டிற்கு அருகில் சென்று ‌தோல்வியுற்ற போதும் அருமையான போட்டியாக அமைந்தது என பதிவிட்டுள்ளார். அடுத்த சீசனில் ஒரு படி அதிக பங்களிப்பை அளிக்க நம்பிக்கையுடன் காத்திருப்பதாக கூறியுள்ள வாட்சன் "விசில் போடு" என்று கூறி முடித்துள்ளார். 

ஐ.பி.எல். தொடரில், மும்பைக்கு எதிரான இறுதி போட்டியில், முழங்காலில் ஏற்பட்ட காயத்துடன், ரத்தம் சொட்டசொட்ட விளையாடிய வாட்சனுக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்திருந்தனர். அந்த காயத்தால் அவரது முழங்காலில் தையல் போடப்பட்டுள்ளது. தனக்கு காயம் ஏற்பட்டதை வெளியே சொல்லாமல் வெற்றிக்காக வாட்சன் போராடிய உண்மை வெளியில் தெரியவர, தோற்றாலும் பரவாயில்லை என ரசிகர்கள் அவரை கொண்டாடித்தீர்த்தனர். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close