[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி
  • BREAKING-NEWS சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS அயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்

‘ஜிம்’ வேண்டாம் ‘யோகா’ போதும் - கிறிஸ் கெயிலின் பிட்னஸ் ரகசியம் 

chris-gayle-chooses-yoga-over-gym-hopes-to-carry-form-into-final-world-cup

ஐந்தாவது முறையாக உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள கிறிஸ் கெயில் தன்னுடைய உடல் தகுதி குறித்து சுவாரஸ்யமான தகவல்களை கூறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில். 39 வயதான இவர், ஐந்தாவது முறையாக உலகக் கோப்பை தொடரில் களமிறங்கவுள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி, 490 ரன்கள் குவித்து இருந்தார். உலகக்கோப்பை தொடர் இந்த முறை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இதனால் அந்த அணி பலமாக இருக்கும் எனப்படுகிறது. ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் தொடரில் 4 இன்னிங்சில் விளையாடிய கெயில் 424 ரன்கள் குவித்தார். அதில் இரண்டு சதம் அடங்கும். சராசரி ரன் ரேட் 106.  

         

தன்னுடைய உடல் தகுதி குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “இதுஒரு நகைச்சுவையான விளையாட்டு. உலகக் கோப்பை தொடரில் நிச்சயம் அதிக ரன்களை குவிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. நிறைய அனுபவம் உள்ளது. தற்போது நான் பேட்டிங் செய்யும் முறையில் மகிழ்ச்சியாக உள்ளேன். அப்படியே தொடர்வேன் என நம்புகிறேன். 

உங்களால் செய்ய முடியும் என நினைத்தால், உங்களுடைய உடல் உங்களுக்கு ஒத்துழைக்கும். அதனால் மனதை தயாராக வைத்திருப்பதுதான் முக்கியமானது. இனிமேல் அதிக அளவில் உடல் தகுதி மீது கவனம் செலுத்த முடியாது. கடந்த சில மாதங்களாக என்னுடைய பிட்னஸ்க்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை.

        

என்னுடைய அனுபவத்தையும், மனோபலத்தையும் பயன்படுத்துகிறேன். சில நேரங்களில் ஜிம்க்கு சென்று பயிற்சி எடுப்பதில்லை. அதிக நேரம் ஓய்வு எடுத்துக் கொள்வேன். அதிக அளவில் மசாஜ் செய்து கொள்வேன். போட்டிக்கு முன்பாக உடலையும், மனதையும் புத்துணர்ச்சி உடன் வைத்துக் கொள்ள முயற்சிப்பேன். ஆடுகளத்தில் என்ன தேவை என்பது எனக்கு தெரியும். 

         

நேர்மையான சொல்ல வேண்டுமெனில் ரசிகர்களுக்காக நான் விளையாடுகிறேன். நான் பொய் சொல்லவில்லை. சில வருடங்களுக்கு முன்பாக ஓய்வு பெற்றுவிடலாம் என நினைத்தேன். ஆனால், போகாதீர்கள் என என்னுடைய ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர். அவர்கள்தான் என்னை இயக்கி வருகின்றனர். இன்னும் சில போட்டிகளில் என்னால் விளையாட முடியும். உலகக் கோப்பையை வெல்ல உதவியாக இருக்க வேண்டும். இவ்வளவு நாள் விளையாடுவேன் என நானே நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close