[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னையில் பிரபல வணிக வளாகத்தின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையொட்டி, அவரது கனரக தொழில், பொதுத்துறை நிறுவனங்கள் துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்புப்பாக அளிக்கப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS அயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்

தோனி ‘ரன் அவுட்’ இல்லை என சச்சின் கூறினாரா? - உண்மை என்ன?

what-sachin-tendulkar-commented-on-ms-dhoni-s-run-out

தோனிக்கு ரன் அவுட் தவறுதலாக கொடுக்கப்பட்டது என்று சச்சின் பேசியதாக ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது.

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் முடிந்த நேரத்திலிருந்து சமூக வலைத்தளங்களில் உலவிக் கொண்டிருந்த மிகப்பெரிய கேள்வி தோனி அவுட்டா? இல்லையா? என்பதுதான். நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் தோனிக்கு அவுட் கொடுத்த போது சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் அதிருப்தி அடைந்தனர். தோனி பேட் கிரிஸில் இருப்பது  போன்ற போட்டோவை பதிவிட்டு நடுவர்கள் மீது விமர்சனங்களை முன் வைத்து பதிவிட்டு வந்தனர். 

               

இருப்பினும், தோனி பேட்டிங் கிரிஸில் தொடுவதற்கு முன்பே பந்து ஸ்டம்பை அடித்துவிட்டது போன்ற படத்தையும் சிலர் பதிவிட்டு சிலர் அவுட் தான் என வாதிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக, சிஎஸ்கே, மும்பை அணியின் ரசிகர்கள் கடந்த இரண்டு நாட்களாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வாதிட்டு வருகின்றனர். தோனி அவுட் இல்லை என ஒரு சிறுவன் அழுவது போன்ற வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

          

இது ஒருபுறம் இருக்கும், தோனிக்கு கொடுத்தது அவுட் அல்ல என்று சச்சின் கூறியதாக ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. அந்தச் செய்தியில், “தோனியின் ரன் அவுட் தான் மும்பை அணியின் வெற்றிக்கு சாதகமாக அமைந்தது. பொதுவாக அம்பயர்கள் ஒரு விக்கெட்டை ரிவியூ செய்யும் போது அதில் சரியான நிலவரம் தெரியவில்லை என்றால், அந்த நேரத்தில் அம்பயர்கள் பேட்ஸ்மேனுக்கு சாதமாக தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது கிரிக்கெட் விளையாட்டின் விதிமுறை.

ஆனால், அம்பயர் நைஜல் லாங் நேற்று விதிமுறைகளை மீறி நடந்து கொண்டது அதிர்ச்சியை அளிக்கிறது. அந்த ரன் அவுட்டுக்காக நான் தோனியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி இந்த மாதிரியான தவறுகளை அம்பயர்கள் திருத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியதாக உள்ளது.

           

ஆனால், சச்சின் டெண்டுல்கர் அப்படி பேசியதாக செய்தி எதுவும் வெளியாகவில்லை. உண்மையில் போட்டி முடிந்த உடன் தோனி ரன் அவுட்டை குறிப்பிட்டுதான் அவர் பேசத் தொடங்கினார். போட்டி முடிந்த பின்னர் சச்சின் பேசுகையில், “தோனியின் ரன் அவுட் தான் திருப்பு முனையாக அமைந்தது. மலிங்கா ரன்களை வாரி வழங்கிய அந்த ஓவருக்கு பின்னரும் பும்ரா அவ்வளவு சிறப்பாக பந்துவீசினார். மலிங்கா தனது கடைசி ஓவரை சிறப்பாக முடித்து வைத்தார்” என்று கூறினார்.

             

சச்சின் பேசியது இப்படி இருக்க, அவர் பேசிய ஒரு செய்தி பலராலும் பகிரப்பட்டு வருகிறது. சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் அதனை பதிவிட்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close